லேபிள்கள்

11.12.17

பதவி உயர்வு சிக்கல்: டிச.,18ல் போராட்டம்

பதவி உயர்வு நடவடிக்கையை மீண்டும் துவங்க வலியுறுத்தி, வரும், 18ல், பள்ளிக் கல்வி அலுவலக வளாகத்தில், போராட்டம் நடத்தப் போவதாக,
பள்ளிக்கல்வி ஊழியர்கள் அறிவித்துள்ளனர். பள்ளிக்கல்வி நிர்வாக அலுவலர் சங்கத்தினர், மாநில செயற்குழு கூட்டம், மாநில தலைவர், நீதிமணி தலைமையில், அரியலுாரில், நேற்று நடந்தது. 
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, பொதுச் செயலர், சீனிவாசன் கூறியதாவது:
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஜன., 2016 முதல், ஊதிய நிலுவைத் தொகையை அரசு, வழங்க வேண்டும். பள்ளிக்கல்வி அலுவலகங்களில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வுகளை, மீண்டும் வழங்க வேண்டும்.
கண்காணிப்பாளர், இருக்கைப்பணி கண்காணிப்பாளர் மற்றும் நேர்முக உதவியாளர் ஆகிய பணியிடங்களை, பதவி உயர்வில் நிரப்ப வேண்டும். 
தாமதம் ஏற்பட்டால், வரும், 18ல், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், மாநில அளவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக