குரூப் - 4 தேர்வுக்கு பதிவு செய்ய, நேற்று கடைசி நாள் என்பதால், லட்சக்கணக்கானோர் முயற்சித்ததால், இணையதளம் முடங்கியது. தமிழக அரசுத் துறைகளில், குரூப் - 4 பதவிகளில்,
9,351 காலியிடங்களை நிரப்ப, பிப்., 11ல், எழுத்து தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கிராம நிர்வாக அதிகாரிகளுக்கான, 494 காலி இடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுக்கு, நேற்று முன்தினம் வரை, 15 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். பதிவு செய்வதற்கு, நேற்று கடைசி நாள். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் பதிவு செய்ய முயற்சித்ததால், இணைய தளத்தின் செயல்பாடு முடங்கியது. மாலையில், இணைய தளம் ஓரளவு இயங்க துவங்கியது. ஆனாலும், தேர்வுக்கு பதிவு செய்ய முடியாமல், பலர் ஏமாற்றம் அடைந்தனர். பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாக கொண்ட, குரூப் - 4 தேர்வில், அனைவரும் பங்கேற்கும் வகையில், கூடுதலாக, இரண்டு நாள் அவகாசம் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. 'இந்த கூடுதல் அவகாசத்தில் விண்ணப்பிப்பவர்களிடம், கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம்' என்றும், பயிற்சி மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக