லேபிள்கள்

11.6.13

இரட்டைபட்டம் வழக்கு வருகிற 12ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


          இரட்டைப்பட்டம் எனும் முறையில் ஓராண்டு பட்டப்படிப்பு மற்றும் மூன்றாண்டு பட்டம் படித்தவர்களுக்கு இடையேயான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாகவும் இன்று மாலைக்குள் தற்காலிக முடிவு தெரியவரும் என்று  பல்வேறு தரப்பிலிருந்தும் தகவல்கள் தெரிவித்தன.

              ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகள் குறித்த பட்டியலில் மேற்படி வழக்கு குறித்த விபரம் இடம் பெறவில்லை. ஆகையால் இதுகுறித்த உண்மைநிலையை அறிய விசாரித்த போது, வழக்கு தொடுத்த முக்கிய ஆசிரியர் கூறுகையில், வழக்குறைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் மேற்படி வழக்கு வருகிற 12ந் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக