TNTET – 2013 விண்ணப்பங்கள் விற்பனை தொடர்பான தலைமை ஆசிரியர்களுக்கான குறிப்புகள்
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு – 2013 தேர்விற்கான விண்ணப்பங்கள்இம்முறை அனைத்து அரசு மேனிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள்மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கான தகுந்த முன்னேற்பாடுகள்செய்திட தலைமை ஆசிரியர்களுக்கு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
1. TNTET – 2013 தேர்விற்கு தாள் 1 மற்றும் தாள் 11க்கு வெவ்வேறு விண்ணப்பங்கள்வடிவமைக்கப்பட்டுள்ளன.
3. விண்ணப்பம் ஒன்றின் விலை ரூ.50/- விண்ணப்பத் தொகையினை ரொக்கமாக பெற்றுக் கொண்டு, ஒரு விண்ணப்பதாரருக்கு ஒர் விண்ணப்பம் வழங்கப்பட வேண்டும்.
4. விண்ணப்பதார்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் போது விண்ணப்பதாரர் பெயர், விண்ணப்பம் வழங்கப்பட்ட நாள், விண்ணப்ப எண் ஆகியவற்றை உரிய பதிவேட்டில் (மாதிரி படிவம் - 1 இணைப்பட்டுள்ளது) பதிவு செய்ய வேண்டும்.
5. ஒவ்வொரு நாளும் விண்ணப்பங்கள் விற்பனை செய்த விவரம், விண்ணப்பங்கள் இருப்பு ஆகியவற்றை தங்கள் பள்ளிக்கு உரிய தொடர்பு அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். (பத்து பள்ளிகளுக்கு ஒரு தொடர்பு
அலுவலர் (முதன்மைக் கல்வி அலுவலரால் நியமிக்கப்பட்டுள்ளார்).
6. விண்ணப்பங்கள் கூடுதலாக தேவைப்படின் முன்கூட்டியே தொடர்பு அலுவலருக்கு தெரிவித்து விண்ணப்பங்களை பெற்று விண்ணப்ப விற்பனை இடையூறு ஏற்படாமல் நடைபெறுவது உறுதி செய்திட வேண்டும்.
7. தொடர்பு அலுவலர் தமது பகுதியின் இருப்பு, தேவை குறித்து தினமும்மாவட்டக் கல்வி அலுவலருக்கு தெரிவித்திடல் வேண்டும், பள்ளிகளில்தேவைக்கேற்ப விண்ணப்பங்களை மாவட்டக் கல்வி அலுவலரிடமிருந்துபெற்று வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
8. விண்ணப்பங்கள் 17.06.2013 காலை 10.00 மணி முதல் 01.07.2013 மாலை 5.30 மணிவரை (ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து) அனைத்து நாட்களிலும் காலை 10.00 மணிமுதல் மாலை 5.30 வரை விற்பனை செய்யப்பட வேண்டும்.
9. 01.07.2013 அன்று விண்ணப்ப விற்பனையினை முடித்த பின், விண்ணப்பம் ஒன்றிற்கு ரூ.2/- வீதம் விற்பனை செய்தமைக்காக தலைமை ஆசிரியர் பிடித்தம் செய்து கொண்டு மீதமுள்ள தொகையினை மாவட்டக் கல்வி அலுவலரிடம் இணைப்பில் கண்டுள்ள படிவத்தினை (படிவம் 2 இணைக்கப்படுள்ளது) பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்.
10. விண்ணப்ப விற்பனை மையத்தில் அறிவிப்பு பலகை (மாதிரி
இணைப்பப்பட்டுள்ளது) வைக்கப்படுதல் வேண்டும்.
விண்ணப்பம் விற்பனை மையத்தில் வைக்க வேண்டிய அறிவிப்பு பலகை
* தாள் 1 மற்றும் தாள் 11க்கு தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்
1.D.T.Ed / D.E.Ed முடித்து 1 முதல் 5 வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்பணிவாய்ப்பிற்கு தகுதி பெற தாள் 1 க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
2. 10+2+3 முறையில் பயின்று B.A or B.Sc பட்டப்படிப்பில் தமிழ், ஆங்கிலம்,கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும்புவியியல் ஆகிய பாடங்களில் அல்லது அதற்கு இணையான பாடங்களில் பட்டமும் B.Ed பட்டமும் பெற்று 6 முதல் 8 வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியராகதகுதி பெற வேண்டுவோர் தாள் 11க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
3.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகத்தில்மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
4.விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 01.07.2013 மாலை 05.30 மணிவரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக