என்ஜினீயரிங் ரேங்க் பட்டியல் இன்று மதியம் வெளியீடு முதல்கட்ட கவுன்சிலிங் 21–ந் தேதி தொடங்குகிறது:
என்ஜினீயரிங் விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதல்கட்ட பொது கவுன்சிலிங் 21–ந் தேதி தொடங்குகிறது.
2 லட்சம் இடங்கள்
தமிழ்நாட்டில் 550–க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்பட உள்ளன. இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேர ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 397 பேர் விண்ணப்பித்தனர்.
இவர்களில் மாணவர்கள் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 891 பேர். மாணவிகள் 74 ஆயிரத்து 506 பேர் ஆவர். மொத்த மாணவ–மாணவிகளில் ஒரு லட்சம் பேர், முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக வரவுள்ள 3 அரசு கல்லூரிகள் உள்பட 11 என்ஜினீயரிங் கல்லூரிகள் மூலமாக கூடுதலாக 3,300 இடங்கள் கிடைக்கும்.
இன்று ரேங்க் பட்டியல் வெளியீடு
என்ஜினீயரிங் விண்ணப்பித்த ஒரு லட்சத்து 89 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கும் கடந்த 5–ந் தேதி கம்ப்யூட்டர் மூலமாக ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், அவர்களுக்கான ரேங்க் பட்டியல் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படுகிறது.
உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் ரேங்க் பட்டியலை வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில், உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, தொழில்நுட்பக்கல்வி ஆணையர் குமார் ஜெயந்த், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.ராஜாராம், தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.
கவுன்சிலிங் எப்போது?
என்ஜினீயரிங் விண்ணப்பித்த மாணவ–மாணவர்கள் ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu) தெரிந்துகொள்ளலாம். ரேங்க் பட்டியலை தொடர்ந்து, விரும்பும் கல்லூரியையும், பாடப்பிரிவையும் தேர்வு செய்வதற்கான கவுன்சிலிங் நடத்தப்படும். முதலில் விளையாட்டு பிரிவினருக்கான கவுன்சிலிங் 17, 18, 19 ஆகிய தேதிகளிலும், மாற்று திறனாளிகளுக்கான கவுன்சிலிங் 20–ந் தேதியும் நடைபெறும். பொது கவுன்சிலிங் 21–ந் தேதி தொடங்கி ஜூலை 30–ந் தேதி வரை நடத்தப்படும்.
கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவ–மாணவிகள், அவர்களின் பெற்றோர் வசதிக்காக பிரமாண்டமான ஓய்வறை, கவுன்சிலிங் அறைக்கு நீண்ட கியூவில் செல்லும் மாணவர்களுக்காக பெரிய கூடாரம், கல்விக்கடன் ஆலோசனை வழங்கும் வங்கிகளுக்கான அரங்குகள் ஆகியவையும் முழுவீச்சில் அமைக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக