லேபிள்கள்

13.6.13


பள்ளிகளில் கட்டாய நன்கொடை வசூல் தணிக்கை குழுவினர் நியமித்து உத்தரவு


          பள்ளிகளில் நன்கொடை வசூல் தொடர்பாக தணிக்கை குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். புகார் தெரிவிக்க வசதியாக டெலிபோன் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
           நெல்லை மாவட்ட பள்ளிகளில் கட்டாய நன்கொடை வசூலிக்கப்படுவதாக வரும் புகார்கள் தொடர்பாக அனைத்து பள்ளிகளிலும் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் பள்ளிகளில் திடீர் தணிக்கை செய்து அறிக்கை அனுப்பவும், சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கவும், ஒவ்வொரு கோட்டத்திலும் சப்-கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஓக்கள், டி.எஸ்.பிகள், போலீஸ் உதவி கமிஷனர், மாவட்ட கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், பாங்க் பிரதிநிதி, கருவூல அலுவலக பிரதிநிதி, ஆதிதிராவிடர் நலத் துறை தனி தாசில்தார் ஆகியோர் அடங்கிய தணிக்கை குழுவினர் நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
 
           எனவே, பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது பெற்றோரிடம் கட்டாய நன்கொடை வசூலிக்கப்பட்டால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட குழு அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம். இந்த புகார்கள் மீது உரிய விசாரணை செய்வதுடன் 2009ம் ஆண்டு கட்டாய கல்வி உரிமை சட்ட பிரிவுகளின்படி தணிக்கை செய்தும், புகார்களில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளி பொறுப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக