லேபிள்கள்

9.6.13

ஆசிரிய நண்பர்களே புதிய கல்வியாண்டு சிறப்புடன் அமைய  வேண்டுகோள்

1.தேசம் என்றால் மக்கள், பள்ளி என்றால் படிப்பு.என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

2.
தினமும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி செல்லுங்கள்.

3.
கற்பித்தல் இல்லா நாளே இருக்க கூடாது என்பதை மனதில் இருத்துங்கள்.

4.
தேவையற்ற விடுப்பு, அனுமதி தவிருங்கள்.


5.தனியாக புள்ளி விவர பதிவேடு தொடங்குங்கள்.


6.
மாணவர்கள்தாம் ந்ம் எஜமானர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள், .கனிவுடன் பேசுங்கள்.

7.
காலை உணவு தவிர்க்காதிருக்க அறிவுரை கூறுங்கள்.

8.
சிறு சிறு நல்ல செயலையும் பாரட்டுங்கள்.

9.
தவறுகள் செய்யும்போது அன்புடன் தனியே கண்டியுங்கள்.

10.
உதவி ஆசிரியர்களிடம் அன்புடன் கண்டிப்பாயிருங்கள். அவ்வப்போது மாணவர் எதிரிலேயே பாராட்டுங்கள்.

11.
மாணவர்களின் பெற்றோரை அழைத்து பேசுங்கள்.

12.
கணினி வழிக்கல்வி செயல்முறைப் படுத்துங்கள்.

13.
மாணவர்கள் இல்லை என்றால் பள்ளி இல்லை, பள்ளி இல்லை என்றால் பணி இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

14.
மாணவன் நன்மையை முன்னிட்டு கற்பியுங்கள்.

15.
தன் ஒழுக்கம் பள்ளியில் அனைத்து செயல்களிலும் அனைவரிடம் இருத்தல் மிக முக்கியம் என்பதை தினமும் செயல்படுத்துங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக