லேபிள்கள்

12.6.13


எம்.பி.பி.எஸ்., தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு


          மருத்துவப் படிப்பு விண்ணப்பதாரர்களுக்கான தர வரிசைப் பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது. மருத்துவக் கல்வி இயக்கக அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், தர வரிசைப் பட்டியலில், முதல், 10 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு, அவர்களுக்கான, கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையையும், அமைச்சர் வழங்குகிறார்.

         எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, இந்த ஆண்டு, 29 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான, "ரேண்டம்" எண், கடந்த, 7ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மருத்துவப் படிப்பு விண்ணப்பதாரர்களுக்கான தர வரிசைப் பட்டியலை, சுகாதாரத் துறை அமைச்சர் வீரமணி, இன்று வெளியிடுகிறார். 

         தரவரிசைப் பட்டியல் வெளியீட்டிற்கு பின், விண்ணப்பதாரர்கள் தங்கள், தர வரிசை விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் பெறலாம். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதியும், இன்று அறிவிக்கப்படும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக