தொடக்கக் கல்வித் துறையில் கற்ற கல்விக்கு மதிப்பில்லை, வகிக்கும் பதவிக்குதான்
முன்னுரிமை அளிக்கப்படுகிறது என பட்டதாரி ஆசிரியர்
வருத்தத்துடன் கூறுகிறார்
பள்ளிக்கல்வித்துறை நிர்வாக வசதிக்காக தொடக்கக்கல்வி அலகு மற்றும் பள்ளிக்கல்வி அலகு எனும் இரு அலகுகளாக 1986 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
1989 ஆம் ஆண்டுக்கு பிறகு தொடக்கக்கல்வித்துறையின்
அனைத்து பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்களும் அரசுப்பள்ளி ஆசிரியர்களாக
ஈர்க்கப்பட்டு தற்போது வரை பள்ளிக்கல்வித்துறை செயலரின் கீழ் தொடக்கக்கல்வி இயக்குனரின்
நிர்வாக அலகில் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர்.
2003 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்ற அரசின் கொள்கை முடிவை தொடர்ந்து அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் அந்தந்த பாடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு 2004 ஆம் ஆண்டு ஜூலை 1 தேதி முதல் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர்.
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்ற அரசின் கொள்கை முடிவை தொடர்ந்து நடுநிலைப்பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் புதிதாக பணியிடம் உருவாக்கப்படும் போது அதற்கான பதவி உயர்வு வழிமுறைகளை உருவாக்காததன் விளைவாகவும், சிறிதும் பொருந்தாத 1998 ம் ஆண்டு வெளியிடப்பட்ட நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான அரசு ஆணையை (அ.ஆணை 166) தொடர்ந்து பின்பற்றி வருவதால் 2004 முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நியமிக்கப்பட்ட என் போன்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மறுக்கப்படுகிறது.
அரசு ஆணை 166 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்
பதவி உயர்வுக்கு ஊட்டுப்பதவிகளான தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்,
மற்றும் தமிழாசிரியர் பதவிகளில் இருந்து அவர்கள் ஒன்றியத்தில் பணியேற்ற தேதியின் அடிப்படையில்
ஒருங்கினைந்த தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு கல்வித்
தகுதி பட்டப்படிப்பு மற்றும் B.ed ஆகும். பட்டதாரி
ஆசிரியர் பதவிக்கு கல்வித் தகுதி பட்டப்படிப்பு
மற்றும் B.ed ஆகும். தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு கல்வித்
தகுதி D.Ted. ஆகும்.
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்
பதவிக்கு ஓருங்கினைந்த தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்கப்படும்போது பட்டப்படிப்பு மற்றும்
B.ed கல்வி தகுதியுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நியமிக்கப்பட்ட என் போன்ற பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்தில் பணியில் சேர்ந்த தேதிக்கு பிறகு பட்டப்படிப்பு மற்றும் B.ed கல்வி முடிக்கும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள்
தேர்ந்தோர் பட்டியலில் பட்டதாரி ஆசிரியர்களின் பெயர்களுக்கு முன்னர் சேர்க்கப்பட்டு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெறுகின்றனர்.
ஏன் என்று கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டால்
ஊட்டுப்பதவியான தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராக பணியில் சேர்ந்த தேதியை தான் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு எடுத்துக்கொள்ளவேண்டும்
என கூறுகின்றனர்.
பட்டதாரி
ஆசிரியராக நியமிக்கப்படும்போதே நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்குரிய கல்வித்தகுதியை
பெற்று இருந்தும், நாங்கள் பணி நியமனம் செய்யப்பட்ட தேதிக்கு பிறகு அக்கல்வித்தகுதியை
பெறும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு
அடைவதால் என் போன்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கற்ற கல்விக்கு மதிப்பில்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக