லேபிள்கள்

3.12.13

மீண்டும் புத்துயிர் பெறுமா TNGTF ன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கு.

நடுநிலைப்பள்ளி பள்ளியில் பணியாற்றும் 25,000க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு  நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு  வழங்க கோரி TNGTF (தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு) சார்பில்
2009  ல் மதுரை ஜகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சாதமாக 2010 ல்  தீர்ப்பு வழங்கப்பட்டது.

        வழக்கின் தீர்ப்பை நிறைவேற்ற  நமது அமைப்பின் (TNGTF) மாநில பொறுப்பாளர்கள் கல்வித் துறை செயலரையும், தொடக்க கல்வி இயக்குனரையும் நேரில் சந்தித்து பேசினர்.

         மேற்படி வழக்கு சம்பந்தமாக கருத்துருக்களை அனுப்புமாறு பள்ளிக்கல்வி துறை செயலரிடம் இருந்து 10.02.2010 ல் தொடக்க கல்வி இயக்குனருக்கும்  மற்றும் 26.05.10 ல் பள்ளிக் கல்வி இயக்குனருக்கும் கடிதம் அனுப்ப பட்டது.

           ஆனால் தொடக்க கல்வி இயக்குனரிடம் இருந்து சரியான கருத்துருக்கள் இதுவரை அனுப்பப் படாததால் நடுநிலைப்பள்ளியில் நியமிக்கப்பட்ட  25,000க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியராக பதவி  உயர்வு பெற முடியாத சூழ்நிலை உருவாகி இருப்பதுடன், தங்கள் பணிக்காலம் முழுவதும்  பட்டதாரி ஆசிரியாரகவே பணியாற்றி ஒய்வுபெறும் சூழ்நிலையும் தொடக்க கல்வித்துறையில் உருவாகி உள்ளது.


     எனவே  இவ்வழக்கின் கோப்புகளுக்கு  மீண்டும் புத்துயிர்  அளிக்கப்படுமா? என நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக