லேபிள்கள்

7.12.13

குரூப் 4 தேர்வு : 2ம் கட்ட கவுன்சலிங் 11ம் தேதி தொடக்கம்

குரூப் 4 தேர்வுக்கான 2ம் கட்ட கவுன்சலிங் வருகிற 11ம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 4  ( 2007- 2008, 2012-2013ம் ஆண்டு) அடங்கிய சுருக்கெழுத்து தட்டச்சர், நிலை-3 பதவிக்கான எழுத்துத் தேர்வு 7.7.2012 அன்று நடைபெற்றது.
இப்பதவியில் மீதமுள்ள 449 காலி பணியிடங்களுக்கான 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்¢ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு வருகிற 11, 12, 13ம் தேதிகளில் காலை 8.30 மணி முதல் சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 

2ம் கட்ட கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர் பதிவெண் மற்றும்¢¢ கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரம் போன்¢ விவரம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர் தங்களது மூலச் சான்றிதழ் மற்றும் சான்றொப்பமிடப்பட்ட ஜெராக்ஸ் நகல் சான்றிதழ்கள் இரண்டையும் கலந்தாய்வுக்கு வரும் போது தவறாமல் கொண்டு வர வேண்டும்.


சான்றிதழ் சரிபார்த் தல் மற்றும் கலந்தாய்வுக்கு விண்ணப்பதாரர் அனுமதிக்கப்படுவது, அவர் பரிசீலிக்கப்படும் போது உள்ள காலிப்பணியிடத்தை பொறுத்தே அலகு ஒதுக்கீடு செய்யப்படும். எனவே, கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்ப தாரர்கள் கலந்தாய்வுக்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக