லேபிள்கள்

3.12.13

ஒழுக்கத்தை போதிக்கும் திட்டம் : குஜராத் பள்ளிகளில் அறிமுகம்

மாணவர்களிடையே, நற்பண்புகளை உருவாக்கவும், சிறந்த குடிமக்களாக மாற்றவும், குஜராத் மாநில பள்ளிகளில், என்.சி.சி., போன்ற புதிய திட்டம், துவக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் குஜராத்தில், முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.., ஆட்சி நடக்கிறது.
இங்கு, பள்ளி மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, புதிய திட்டம் குறித்து, அம்மாநில, டி.ஜி.பி., பிரமோத் குமார் கூறியதாவது:மாணவர்களை, நாளைய சிறந்த குடிமக்களாக உருவாக்கும் நோக்கத்துடன், சுரக் ஷா செடு என்ற, புதிய திட்டம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் துவக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு, போலீசார் அணியும் சீருடை தரப்படும்.

போலீசாரே பயிற்சி :

போலீசார், என்னென்ன பணிகளை செய்து வருகின்றனர் என, இவர்களுக்கு கற்றுத் தருவதோடு, அதற்கான பயிற்சியும் தரப்படும். இந்த பயிற்சியை, போலீசாரே அளிப்பர்.போலீசாரின் பணிகள் மட்டுமல்லாமல், சமுதாயத்தில் சிறந்த குடிமகனாக திகழ்வதற்கான, ஒழுக்க நெறி பற்றியும், அவர்களுக்கு கற்றுத் தரப்படும்
குறிப்பாக, மூத்த குடிமக்களுக்கு மரியாதை தருவது, உயிர்களிடத்தின் அன்பு காட்டுவது, மற்றவர்களுக்கு உதவுவது ஆகிய விஷயங்களை பற்றி, கற்றுத் தரப்படும்.கட்டாயமில்லை ஏற்கனவே, பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும், என்.சி.சி., திட்டத்துக்கும், இதற்கும், வித்தியாசம் உண்டு. என்.சி.சி., பயிற்சி, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு துறையில் சேருவதற்கு உதவுவது. ஆனால், நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள திட்டம், இதிலிருந்து, முற்றிலும் மாறுபட்டது. இந்த திட்டத்தில் சேரும்படி, மாணவர்களை கட்டாயப்படுத்த மாட்டோம். தாங்களாக முன்வந்து சேரும் மாணவர்களுக்கு மட்டுமே, இதில் இடமளிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக