கேள்வி 1: சான்றிதழ் சரிபார்ப்பின் போது தற்காலிக பட்டச் சான்றிதழ் (Provisional Certificate) வைத்திருந்தால் போதுமா? அல்லது நிரந்தர பட்டச் சான்றிதழ் (Convacation Certificate) அவசியம் தேவையா?
பதில் - தற்காலிக பட்டச் சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி அந்த சான்றிதழிளேயே இருக்கும். அந்த தேதி முதல் அடுத்த 6 மாதங்களுக்கு தற்காலிக பட்டச் சான்றிதழ் போதுமானது. ஆனால் ஒரு சில பல்கலைகழகங்களில் 2 வருடங்கள் கழித்தே நிரந்தர பட்டச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. (உதாரணமாக இக்னோ பல்கலைக்கழகம்). இது போன்ற சூழ்நிலைகளில் சான்றிதழ் சரிபார்ப்பின் போது தற்காலிக பட்டச்சான்றிதழை சமர்பித்து, நிரந்தர பட்டச் சான்றிதழ் இதுவரை பல்கலைகழகத்தால் வழங்கப்படவில்லை என்பதால் Relaxation வழங்குமாறு உறுதிமொழி கடிதம் கொடுத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.
கேள்வி 2 - சான்றிதழ் சரிபார்ப்பின் போது UG Degree Or PG Degree யின் Cumulative Mark Sheet (மொத்த மதிப்பெண் அட்டவணை) அவசியம் தேவைப்படுமா?
பதில் - இல்லை. ஒவ்வொரு ஆண்டிற்கும் தனித்தனி சான்றிதழ்கள் வைந்திருந்தால் கூட போதுமானது. மொத்த மதிப்பெண் சான்றிதழ் இருந்தால் சராசரி மதிப்பெண் கண்டுபிடிக்க இலகுவாக இருக்கும் அவ்வளவு தான். எனவேCumulative Mark Sheet இல்லாவிட்டாலும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். ஆனால் ஒருசில பல்கலைகழங்களில் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண்கள் கிரேடு முறைகளில் வழங்கப்படும் (உதாரணமாக இக்னோ பல்கலைக்கழகம்). இது போன்ற நிலையில் Cumulative Mark Sheet அவசியம் தேவை. மேலும் அதே சான்றிதழின் கீழோ அல்லது பின்புறத்திலோ எந்த கிரேடு எவ்வளவு மதிப்பெண்ணுக்கு இணையானது என அட்டவணையும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இது மிகவும் அவசியமான அட்டவணை ஆகும். இல்லையேல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க இயலாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக