சிறப்பு கல்வி கட்டண நிதியாக 2 ஆண்டுகளுக்கு, ரூ.41 கோடியை, அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில், அரசு, உதவி பெறும் நடுநிலை, உயர், மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, கடந்த 2008 வரை, ஆண்டு சிறப்பு கல்வி கட்டணம், பள்ளிகளில் வசூலிக்கப்பட்டது.
இதன் மூலம் கிடைத்த நிதி மூலம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வந்தனர். கடந்த 2008ல் தி.மு.க., ஆட்சியின் போது, அப்போதைய கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறப்பு கல்வி கட்டணம் ரத்து செய்துள்ளதாக அறிவித்தார். இதற்கென, ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்ட, ஆண்டுதோறும் அரசே அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சிறப்பு கல்வி கட்டண நிதியை வழங்கும் என, தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களிடம், சிறப்பு கல்வி கட்டண நிதி வசூலிக்கப்படவில்லை. ரூ.41 கோடி : கடந்த 2008 -09ம் கல்வி ஆண்டிற்கு முன்பு வரை, 6 முதல் 8ம் வகுப்பிற்கு ரூ.29, 9 முதல் 10ம் வகுப்பிற்கு ரூ.41, மேல்நிலைப்பள்ளி மாணவர்களில், அறிவியல் பிரிவுக்கு ரூ.93, தொழிற்கல்விக்கு ரூ.83, கலைப்பிரிவுக்கு ரூ.63 வீதம் கட்டணம் வசூலித்தனர். இதற்கு (2008-09) பின், சிறப்பு கல்வி கட்டணம் ரத்தானது.
இதற்கான, செலவினங்களை ஈடுகட்டும் வகையில், 2012 - 13 மற்றும் 2013 -14ம் கல்வி ஆண்டிற்கான, சிறப்பு கல்வி கட்டணத்தை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு ஒதுக்கியுள்ளது. 2012- 13ம் கல்வி ஆண்டுக்கு ரூ.20.50 கோடியும், 2013-14ம் கல்வி ஆண்டுக்கு ரூ.20.50 கோடியும் என, இரண்டு கல்வி ஆண்டுகளுக்கு, ரூ.41 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" சிறப்பு கல்வி கட்டண நிதி, சி.இ.ஓ.,க்களுக்கு, அரசு அனுப்பியுள்ளது. தலைமை ஆசிரியர்களுக்கு, "செக்' ஆக வழங்கப்படும். அவர்கள், பள்ளிகளின் தேவைக்கு, இந்த நிதியை பயன்படுத்துவர்,'' என்றார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக