லேபிள்கள்

5.12.13

நீக்கிய 2 கேள்விக்கு மதிப்பெண், வணிகவியல் ஆசிரியர் பணித்தேர்வு மறுமதிப்பீடு செய்ய ஐகோர்ட் உத்தரவு

'முதுநிலை வணிகவியல் பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வில் நீக்கப்பட்ட இரு கேள்விகளுக்கு இரு மதிப்பெண் வழங்கி, தேர்வுத்தாளை மறு மதிப்பீடு செய்து முடிவு அறிவிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. முதுநிலை வணிகவியல் பட்டதாரி ஆசிரியர் தேர்வில், சரியாக பதிலளித்தும் 7 கேள்விகளுக்குமதிப்பெண் வழங்கவில்லை. அந்த கேள்விகளுக்கு முழுமதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிடக்கோரி ஷெர்லி சத்தியா சிரோன்மணி உட்பட பலர், ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்

இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு:

வணிகவியல் ஆசிரியர் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 48 மற்றும் 63 ஆகியன நீக்கப்படுகின்றன. கேள்விக்கும், பதிலுக்கும் தொடர்பில்லாததால் அந்த இரு கேள்விகளும் நீக்கப்படுகின்றன. அந்த கேள்விகளுக்கு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் இரு மதிப்பெண்கள் வழங்க வேண்டும். இந்த மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை வணிகவியல் பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வு தாளை மறு மதிப்பீடு செய்து, தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.ஐகோர்ட் கிளை அதிரடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக