மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தில் (சிபிஎஸ்இ), 9 மற்றும் 11ம்வகுப்பு படிக்கும் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து கேள்விக்கு விடைஎழுதுவதற்கு கூடுதலாக நேரம் ஒதுக்கியுள்ளது.
கடந்த ஆண்டு முதல் சிபிஎஸ்இ.,யில் ஒன்பதாம் வகுப்பு மற்றும்பதினொராம் வகுப்பு படிப்புக்கு மாணவர்களுக்கு, தேர்வு முறையைஎளிதாக்க புத்தகத்தை பார்த்து கேள்விக்கு விடை எழுதும் முறையைகொண்டு வந்துள்ளது. இதற்கு 3 மணி நேரம் மட்டும் ஒதுக்கப்படும்.ஆனால் இந்த கல்வியாண்டு முதல் அரை மணி நேரம் கூடுதலாகஒதுக்கப்படும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் புத்தகத்தைப் பார்த்து எழுதும்பகுதிகளில் பெறும் மதிப்பெண்களும், எப்போதும் எழுதி பெறும்மதிப்பெண்களும் சேர்த்துக் கொள்ளப்படும் வகையில் திருத்தங்கள்செய்யப் பட்டுள்ளன. இந்தத் தகவல் குறித்து அனைத்து சிபிஎஸ்இபள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக