'வரும் பொது
தேர்வில், பிளஸ்
2 மாணவருக்கு, 38 பக்கங்கள் கொண்ட
விடைத்தாள் கட்டும், 10ம்
வகுப்பு மாணவருக்கு, 30 பக்கங்கள் கொண்ட
விடைத்தாள் கட்டும் வழங்கப்படும். இதன்மூலம், விடைத்தாள், காணாமல் போவது
மற்றும் வேறு
விடைத்தாளில் கலப்பது போன்ற
பிரச்னைகளுக்கு, தீர்வு
காண
முடியும்,'' என,
தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், நம்பிக்கை தெரிவித்தார்.
மாணவர்கள், கூடுதல் விடைத்தாள்களை பெற்று,
கடைசியில், அதை
நூலால்
கட்டுவதில் தடுமாறுகின்றனர்; பல
மாணவர்,
சரியாக
கட்டுவதில்லை. இல்லையெனில், பக்கங்களை மாற்றி
மாற்றி
கட்டிவிடுவர். சரியாக
கட்டப்படாத விடைத்தாளில் இருந்து, சில
பக்கங்கள், தேர்வு
மையத்திலேயே, கழன்று
விழுந்து, 'மிஸ்'
ஆவதற்கு, வாய்ப்பு உள்ளது.
சிக்கல் ஏற்படுகிறது:
இதுபோல், தனியாக
பிரியும் விடை
தாள்களை, அதற்குரிய மெயின்
விடை
தாளில்
இணைப்பதில், சிக்கல் ஏற்படுகிறது. ஒரு
மாணவரின் கூடுதல் விடைதாளை, வேறொரு
மாணவரின் விடைத்தாளுடன் தெரியாமல் சேர்த்து விடுகின்றனர். இதனால்,
தேர்வு
முடிவிற்குப்பின், மதிப்பெண் குறைந்துவிட்டது என்றும், விடை
தாள்
நகலை
வாங்கி
பார்த்தபின், குறிப்பிட்ட பக்கம்,
தன்னுடையது அல்ல
என்றும், மாணவர்
புகார்
கூறுகின்றனர். இதுபோன்ற பிரச்னைகள் அனைத்தையும், அதிகமான பக்கங்களை உள்ளடக்கிய விடைதாளை வழங்குவதன் மூலம்
தீர்க்க முடியும் என,
நம்புகிறோம். தனி
தேர்வுகளில், இதுபோன்ற விடை
தாளை
வழங்கி,
சோதித்து பார்த்ததில், எந்த
பிரச்னையும் ஏற்படவில்லை.
விடை தாள் கட்டு:
அதனால்,
வரும்
பொது
தேர்விலும், இதுபோன்ற விடை
தாள்
வழங்கப்படும். பிளஸ்
2 மாணவருக்கு, 38 பக்கங்கள் கொண்ட,
விடை
தாள்
கட்டு
வழங்கப்படும். இந்த
விடை
தாள்
கட்டில் இருந்து, எந்த
ஒரு
பக்கமும், தனியாக
பிரிய
வாய்ப்பு இல்லை.
அதேபோல், 10ம்
வகுப்பு மாணவருக்கு, 30 பக்கங்களை கொண்ட,
விடை
தாள்
கட்டு
வழங்கப்படும். மிக
நன்றாக
படிக்கும் மாணவர்களாக இருந்தால், இந்த
விடை
தாளுடன், கூடுதலாக, ஒரு
விடை
தாளை
பெற்றால் போதும்.
சராசரி
மாணவருக்கு, இந்த
விடைத்தாளே போதும்.
இந்த
முறையினால், மாணவரின் விடை
தாள்,
மிகவும் பாதுகாப்பான முறையில், விடை
தாள்
திருத்தும் மையங்களுக்கு சென்று
சேரும்.
இவ்வாறு, தேவராஜன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக