லேபிள்கள்

12.1.14

அனைத்து ஆசிரியர் காலியிடங்களும் இன்னும் 15 நாட்களுக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் கே.சி.வீரமணி

காலியாகவுள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார். வேலூரில் நடைபெற்ற கல்வித்துறை அலுவலர்கள்,
தலைமை ஆசிரியர்களுக்காக ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார்.

இதுவரை 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் இன்னும் 15 நாட்களுக்குள் காலியாகவுள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்த ஆண்டு 10 மற்றும் 12- ஆம் வகுப்புத் தேர்வில், மாணவ- மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாக உயர்த்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த தமிழக அரசு 45 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக