நாட்டில் உள்ள, 5 கோடி தொழிலாளர்களின், வருங்கால வைப்பு நிதியின், நடப்பு நிதியாண்டிற்கான வட்டி வீதம், 8.75 சதவீதமாக நேற்று
நிர்ணயிக்கப்பட்டது. மத்திய, தொழிலாளர் நலத்துறை அமைச்சர், மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கூடிய, பி.எப்., அமைப்பின் வாரிய கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.தொழிற்சங்கங்கள், '9 சதவீதம் வழங்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்திருந்தன. எனினும், பி.எப்., முதலீட்டு வட்டி வருவாய் அடிப்படையில், 8.75 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டதாக, அமைச்சர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக