தென்மாநில அளவிலான பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி, சென்னையில், வரும் 20 முதல் 24ம் தேதி வரை நடக்கிறது.
கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில், அந்தந்த மாநில அளவில், பள்ளி மாணவரிடையே, அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில், மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட அறிவியல் படைப்புகளைக் கொண்டு, தென்மாநில அளவிலான, 27வது அறிவியல் கண்காட்சி, சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில், வரும் 20 முதல் 24ம் தேதி வரை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, பள்ளி"க் கல்வித் துறை செய்துள்ளது. இதில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியர் குழு பங்கேற்கி"றது. ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், 50 மாணவர், 50 ஆசிரியர் என, 250 பேர் பங்கேற்பர்; 250 அறிவியல் படைப்புகள், காட்சிக்கு வைக்கப்படும் என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். கண்காட்சியை, பள்ளிக்கல்வி அமைச்சர், வீரமணி துவக்கி வைக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக