லேபிள்கள்

14.1.14

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்ட சிலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்ட சிலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு. முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி நியமனத்துக்கான தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையிலும்,



         மேலும் பல முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்திலும் மதுரைக்கிளையிலும் வழக்கு தொடுத்தவண்னம் உள்ளனர்.


                    கடந்த வெள்ளியன்று நீதியரசர் சுப்பையா முன் விசாரணைக்கு வந்த 5 வழக்குகளில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஆண்டனி கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு 21 கருணைமதிப்பெண்கள் வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது போன்று 5 மனுதாரர்களுக்கும் 21 கருணை மதிப்பெண்கள் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தெரிகின்றது மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் விஜயன்,இராஜேந்திரன் ஆகியோர் ஆஜராகினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக