லேபிள்கள்

14.1.14

புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் தமிழக அரசு ஏன் நிராகரிக்கவேண்டும்?

ஓய்வூதியம் என்றால் என்ன? நோபல் பரிசும், இந்தியாவின் மிக உயர்ந்த பாரதரத்னா விருதும் பெற்ற பொருளாதாரமேதை அமார்த்தியசென்ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உற்பத்தி
செய்யப்பட்ட செல்வத்தின் சமமான மறுபங்கீடேஎன்று விளக்கமளித்துள்ளார். செல்வத்தை உற்பத்தி செய்வதே தொழிலாளிதான்.அதில் அவனுக்குப் பங்கு உண்டு. இந்த அடிப்படையில்தான் 1871ல்ஓய்வூதியச் சட்டம் 1871’ நிறைவேற்றப்பட்டது.
ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்தாகும்அரசியல் நிர்ணயச் சட்டத்தின் 31-ஆவது பிரிவின்படி ஓய்வூதியம் அவரது சொத்துரிமை. ஓய்வூதியம் என்பது ஓய்வு பெற்றவரின் கையில் சென்றுசெர வேண்டும் என ஓய்வூதியச் சட்டம் உறுதிப் படுத்துகிறது. அதை எந்த நீதிமன்றமும்கூடப் பறிமுதல் செய்துவிட முடியாது. உச்சநீதி மன்றம் மன்னர் மான்ய ஒழிப்பு வழக்கில்ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்துரிமை. அரசியல் சட்டத்தின் 31ஆவது பிரிவு அளித்துள்ள இந்த உரிமையைத் தட்டிப் பறிக்க- இந்த அடிப்படை அம்சத்தை மறுதலிக்க நாடாளுமன்றத்துக்குக்கூட அதிகாரமில்லைஎன்று தீர்ப்பு அளித்துள்ளது. நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்குத் பணிக்கொடை வழங்குவதற்காக பணிக்கொடைச் சட்டம் 1972 (GGratuity Act 1972) நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாட்டில் உள்ள தொழிலாளர் எவரும் பணிக்கொடை இல்லாமல் இருக்கக் கூடாது. எனவே அனைவருக்கும் பணிக்கொடை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிக்கொடையைப் பறிக்க அரசுக்கு உரிமை கிடையாது. ஓய்வுபெறும்போது ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெற கம்முட்டேஷன் உரிமையும் ஊழியருக்கு உண்டு. ஒருவேலையில் சேர்ந்து சுமார் 35 முதல் 40 ஆண்டுகள்வரை தனது உழைப்பை நாட்டுக்குத் தந்து ஓய்வுபெறும் ஒருவர் தனது எஞ்சிய வாழ்நாளை ஓரளவாவது குறைந்தபட்ச வசதிகளோடு வாழவேண்டும் என்ற நோக்கில் அவர் பணியில் இருக்கும்போதே அவரது ஊதியத்தில் ஒருகணிசமான தொகையைப் பிடித்தம் செய்து அத்துடன் அதேஅளவுக்கு அரசின் பங்கையும் சேர்த்து ஓய்வுபெறும் நாளில் அளித்திட உருவானதுதான் வருங்கால வைப்புniநிதித் திட்டம்.இதற்காக நிறைவேற்றப்பட்டதுதான் பிராவிடண்ட் ஃபண்ட் சட்டம் 1952 (Employees Provident Fund Act 1952) அனைவருக்கும் பி.எஃப் இருக்கவேண்டும் என்றுசொல்லும் இந்தச்சட்டத்தின்படி எவர் ஒருவருக்கும் இதை மறுப்பது சட்டவிரோதச் செயலாகும்.mm இந்தச் சமூகப்பாதுகாப்புத் திட்டங்களை பா,..தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நிதித்துறை அமைச்சகம் 22.12.2003ல் பிறப்பித்த உத்தரவு ஆபத்துக்குள்ளாக்கியது. எந்த ஒரு அரசு உத்தரவும் இந்திய அரசியல் சாசனத்தின்படி குடியரசுத் தலைவரின் பெயரில்தான் பிறப்பிக்கப் படவேண்டும். அதற்கு மாறாக மத்திய நிதித்துறை அமைச்சகம்புதிய ஓய்வூதியத் திட்டம்என்ற உத்தரவைப் பிறப்பித்தது. இதன்படி ஓய்வூதியவிதிகள். ஓய்வூதியத்தைத் தொகுத்துப்பெறும் விதிகள்,எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஓய்வூதிய விதிகள்,வருங்கால வைப்புநிதி விதிகள் 1.1.2004க்குப்பின் புதிதாகப் பணியில் சேர்பவர்களுக்குப் பொருந்தாது .ஓய்வூதிய விதிகளில்தான் பணிக்கொடை விதிகளும், ஓர்ஊழியர் இறந்தபின் அவரது குடும்பத்திற்கு வழங்கும் குடும்ப ஓய்வூதிய விதிகளும், பணிக்காலத்தில் ஊனம்,நோய் முதலியவற்றால் வேலை இழப்பவர்களுக்கு வழங்கும் இயலாமை ஓய்வூதிய விதிகளும் உள்ளன. நிதித்துறை உத்தரவின்மூலம் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மேற்பார்வையிடவும், வளர்த்திடவும் ஓர்ஆணையம் 10.10.2003 முதல் முன்தேதியிட்டு நியமிக்கப்பட்டது. இந்த ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும். அதன்பின் முறையான சட்டம் இயற்றி அதன்மூலம் உருவாகும் சட்டபூர்வமான ஆணையம் செயல்படும். இது பா...வின் ஆட்சிக்காலத்தில் நிதித்துறையின் செயல்பாடு. 2004ல் ஆட்சிக்குவந்த காங்கிரஸ் தலைமையிலான முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பா... கொண்டுவந்த நிதித்துறை ஆணையைச் சட்டபூர்வமாக்க 29.12.2004 அன்றுஓய்வூதிய நிதியை ஒழுங்கு படுத்துதல் மற்றும் வளர்த்தல் ஆணைய அவசரச் சட்டத்தைப்(Pension Fund Regulatory And Development Authority Ordinance) பிறப்பித்தது. இந்த அவசரச் சட்டத்தைச் சட்டபூர்வ மாக்க 2005 பிப்ரவரியில் P.F.R.D.A 2005 Bill – அறிமுகப்படுத்தியது. ஆனால், .மு.கூட்டணி 1 அரசை வெளியில் இருந்து ஆதரித்த இடதுசாரிக்கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்த்தன. எனவே இந்த மசோதாவை 14-வது மக்களவை முடியும்வரை அந்த அரசால் சட்டமாக்க முடியவில்லை.இதனால்,7.4.2005ல் அவசரச் சட்டம் காலாவதியானது. பி.எஃப்.ஆர்.டி. 2005 பில்ஐச் சட்டமாக்க முடியாத நிலையில் நிதித்துறை அமைச்சகம் 14.7.2008ல் மீண்டும் ஒரு சுற்றறிக்கை மூலம் இடைக்கால ஆணையத்தின் பதவிக்காலத்தை 8.4.2005முதல் என முன்தேதியிட்டு மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்தது. 10.10.2003ல் நியமிக்கப்பட்ட அந்த ஆணையம் 10.10.2011ல் 8ஆண்டுகளைக் கடந்துவிட்டது. 8.4.2005ல் மேலும் 5ஆண்டுகளுக்கு என நீட்டித்த காலமும் 7.4.2010ல் முடிவடைந்து விட்டது 8.4.2010 முதல் சட்டபூர்வத் தகுதியை இழந்துவிட்ட இம்மசோதாவைச் சட்டபூர்வமாக்க .மு.கூட்டணி2 அரசு 24.3.2011ல் ‘.பி.எஃப்.ஆர்.டி. 2011 பில்என அறிமுகப் படுத்தியது.ஆனால் இடதுசாரிக்கட்சிகள்-குறிப்பாக மார்க்ஸிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யாஇந்த மசோதாவை வாக்கெடுப்பின் மூலம்தான் அறிமுகப்படுத்த வேண்டும்என நிர்ப்பந்தித்தார். அவையில் அன்று போதுமான உறுப்பினர் எண்ணிக்கை இல்லாததனால் காங்கிரஸ் கட்சி பா... ஆதரவைப்பெற்று மசோதாவை அறிமுகப் படுத்தியது. அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப் பட்டுவிடுமானல் பழைய ஓய்வூதியத் திட்டதின் சமுதாயப் பாதுகாப்புத் திட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிடும். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10% பிடித்தம் செய்யப்படும். இதற்கு இணையான தொகையை அரசு வழங்கும். இந்த ஓய்வூதிய நிதி மேலாளர்கள் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும்.ஓய்வு பெறும் நாளில் பங்குச் சந்தையின் ஏற்ற,இறக்கங்களுக்கேற்ப ஓய்வூதியம் கிடைக்கும்.பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டால் இலாபம் மட்டுமல்ல: மொத்த முதலீடும் பறிபோய்விடும். அதுமட்டுமா? புதிய ஓய்வூதியத்திட்டத்தில் 1.ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெறமுடியாது. 2.ஓய்வூதியத்திற்கு அகவிலைபடி சேராது. 3.குடும்பஓய்வூதியம் கிடையாது. 4.பணிக்கொடை கிடைக்காது. 5.புதிய ஊதியக்குழுக்கள் பரிந்துரைக்கும் ஊதியத்திற்கேற்ப ஓய்வூதியம் உயராது. -இதுபோன்ற பல்வேறு ஆபத்துக்கள் உள்ளதால்தான் நாடுமுழுவதுமுள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்துப் போராடிவருகிறார்கள். இலட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஏற்பட உள்ள ஆபத்துக்களையும், அவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்ட தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னும், தேர்தலில் வென்று ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னும்தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டமே தொடரும்: புதிய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம்என்று உறுதியளித்தார். அந்த உறுதிமொழியைத் தமிழக முதல்வர் நடைமுறைப்படுத்தும் நாளைத்தமிழ் நாட்டு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக