பள்ளிகளில் படிக்கும் திறமையான மாணவர்களைகண்டறிந்து அவர்களுக்கு உதவித் தொகைவழங்குவதற்காக தேசிய திறனாய்வுத் தேர்வு,
தேசியவருவாய் மற்றும் திறன் தேர்வு, கிராமப்புறமாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு என பல்வேறுதேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தேசிய வருவாய் மற்றும் திறன் தேர்வு 8-ம் வகுப்பு படிக்கும்மாணவர்களுக்காக நடத்தப்படும் தேர்வு ஆகும். இந்ததேர்வை அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள்,நகராட்சி பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில்படிக்கும் மாணவ-மாணவிகள் மட்டும் எழுதலாம். குடும்பஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
மாதம் ரூ.500 உதவித் தொகை
இந்த தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்புமுதல் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.500உதவித் தொகை வழங்கப்படும். தேசிய வருவாய் மற்றும்திறன் தேர்வு மூலமாக தமிழ்நாட்டில் 6,695 பேருக்கு உதவித்தொகை கிடைக்கும்.
2014-ம் ஆண்டுக்கான தேர்வு வரும் பிப்ரவரி 22-ம் தேதிநடைபெற உள்ளது. கடந்த ஆண்டு 57 ஆயிரம் பேர்திறனாய்வுத் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு திறனாய்வுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கதேர்வுத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சிறப்பு பயிற்சி
ஒரு பள்ளியில் இருந்து குறைந்தது 10 மாணவர்களை தேர்வுஎழுதச் செய்யுமாறு தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். திறனாய்வுத் தேர்வில் அதிகமாணவர்களை பங்கெடுக்கச் செய்யுமாறு மாநகராட்சிகல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத் துறை கடிதமும்அனுப்பியுள்ளது.
திறனாய்வுத் தேர்வு, வழக்கமான பாடத் தேர்வு போல்இல்லாமல் மாணவர்களின் சிந்தனைத் திறன் மற்றும்படைப்பாற்றலை அறியும் வகையில் அமைந்திருக்கும்.இதை கருத்தில் கொண்டு திறனாய்வுத் தேர்வு எழுதும்மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல்முறையாக சிறப்புபயிற்சி அளிக்க அரசு தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன (டயட்)முதல்வர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர். அதைத்தொடர்ந்து, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் திறனாய்வுத் தேர்வுகுறித்து மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளைநடத்து வார்கள் என்று அரசு தேர்வுத் துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக