லேபிள்கள்

18.1.14

கணினி ஆசிரியர்கள் தேர்வு விவகாரம் தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய முடியாது ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை உயர் நீதிமன்றம் கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்ததை, மறு  பரிசீலனை செய்யக்கோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது.
தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலை பள்ளிகளில்  பணியாற்றி வந்த 1,800 கணினி ஆசிரியர்கள் பணியை நிரந்தரப்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்தது. இதற்காக சிறப்பு தேர்வும்  நடத்தியது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களின், பணி நிரந்தரப்படுத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள்  அப்பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், தங்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வு  நடத்தக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்து, பணி நீக்கம் செய்யப்பட் டவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வு நடத்த உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நடந்த மறுதேர்விலும் சுமார் 480 பேர் தேர்ச்சி  பெறவில்லை. 

அவர்கள் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தனர். அதில்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 20  தவறானது. இதற்கு விடை எழுதியவர்களுக்கு தனியாக மதிப்பெண் கொடுத்தால், அவர்கள் தேர்வில் வெற்றி பெற்றுவிடுவார்கள்.   இல்லாவிட்டால் மீண்டும் ஒரு சிறப்பு தேர்வு நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனுவை உயர்  நீதிமன்றம் விசாரித்து தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மீண்டும்  கணினி ஆசிரியர்கள் சார்பாக வக்கீல் ஜி.சங்கரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பால்வசந்தகுமார், சசிதரன்  ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர்கள் சார்பாக வக்கீல் ஜி.சங்கரனும், அரசு சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல்  அரவிந்த் பாண்டியனும் ஆஜராகி வாதாடினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த த்தரவிட முடியாது, மனுவை தள்ளுபடி செய்கிறோம். தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய மனுதாரர்கள் கோரியதை ஏற்க முடியாது’’  என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக