ஆசிரியர்
தகுதித்தேர்வில் தோ்ச்சி
பெற்றவா்களுக்கு சான்றிதழ்
சரிபார்ப்பு பணி
புதுக்கோட்டை மாவட்டத்தில்
5 நாட்கள் நடைபெற
இருக்கிறது
என்று
மாவட்ட முதன்மைக்கல்வி
அலுவலா் திரு.நா.அருள்முருகன்
தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து
அவா் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு ஆசிரியர்
தோ்வு வாhpயத்தால்
2013-ம் ஆண்டில்
பட்டதாரி ஆசிரியர்(தாள்2)
மற்றும் இடைநிலை
ஆசிரியர்(தாள்1)
தகுதித்தோ்வு நடத்தப்பட்டது.
அத்தோ்வில் தோ்ச்சிப்பெற்றவா்களுக்கு
புதுக்கோட்டை மாவட்டத்தில்,
புதுக்கோட்டை அருள்மிகு
பிரகதம்பாள் அரசு
மேல்நிலைப்பள்ளியில் சான்றிதழ்
சரிபார்ப்பு பணி
நடைபெற இருக்கிறது.
தகுதித்தேர்வில்
தோ்ச்சி பெற்ற
677 நபா்களுக்கு 20-01-2014(திங்கட்கிழமை),
21-01-2014(செவ்வாய்கிழமை),
22-01-2014(புதன்கிழமை), 23-01-2014( வியாழக்கிழமை),
மற்றும் 24-01-2014(வௌ்ளிக்கிழமை)
ஆகிய 5 நாட்கள்
சான்றிதழ் சரிபார்ப்பு
பணி நடைபெற
உள்ளது. எனவே
ஆசிரியர் தகுதித்தேர்வில்
தோ்ச்சிப்பெற்றவா்கள் அழைப்புக்கடிதம்,
ஆளறிச்சான்று மற்றும்
உரிய ஆவணங்களை
டி.ஆர்.பியின்
இணைய தளத்தில்
பதிவிறக்கம் செய்து
அதில் குறிப்பிட்டுள்ளபடி
அசல் மற்றும்
சான்றொப்பமிட்ட நகல்
சான்றிதழ்களுடன் மூன்று
பாஸ்போர்ட் அளவிலான
புகைப்படத்துடன் அவரவா்க்கு
அழைப்புக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள
தேதியில் காலை
9.30 மணிக்கு வருகை
புரிந்திடவேண்டும். ஆசிரியர்
தகுதித்தேர்வில் தோ்ச்சிப்பெற்று
அழைப்புக்கடிதம் பெற
இயலாவிடில் உரிய
ஆவணங்களுடன் முதன்மைக்கல்வி
அலுவலரை தொடா்பு
கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவா்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக