தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகள், வரும் 14ம் தேதி துவங்குகிறது.தமிழக தட்டச்சுப் பயிலகங்கள் சங்கங்களின் மாநில பொதுச்செயலாளர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசின், தொழில்நுட்பக் கல்வித்துறை மூலமாக நடத்தப்படும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள், பிப்., 14ம் தேதி துவங்குகிறது. அன்று, சுருக்கெழுத்து தமிழ் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வும், 15ம் தேதி சுருக்கெழுத்து ஆங்கிலம் இளநிலை, இடைநிலை மற்றும் முதுநிலை தேர்வுகளும், 21ம் தேதி தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்வு 4 அணிகளாகவும், 22ம் தேதி இளநிலை தேர்வின் 5 வது அணியும், தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்வுகள் 3 அணிகளாவும், தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் உயர் (ஹை ஸ்பீடு) வேகத்தேர்வும் நடக்கிறது.தமிழ்நாடு, புதுச்சேரியிலும் அரசு தட்டச்சு பாடத் தேர்வுகள் 96 தேர்வு மையங்களில் நடக்கிறது.
புதுச்சேரியில் மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியிலும், கடலுார் மாவட்டத்தில் கிருஷ்ணசாமி நினைவு பாலிடெக்னிக், சிதம்பரத்தில் முத்தையா பாலிடெக்னிக், நெய்வேலியில் விவேகானந்தா பாலிடெக்னிக், விருத்தாசலத்தில் அரசு செராமிக் கல்லுாரி ஆகிய 4 மையங்களிலும், விழுப்புரத்தில் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரி, திண்டிவனத்தில் பி.வி.பாலிடெக்னிக் கல்லுாரியிலும் தேர்வுகள் நடக்கிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக