தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தில் காலியாக உள்ளஉறுப்பினர் பதவிகளை நிரப்பவும், அதில் அருந்ததியினர் பிரிவிலிருந்து
ஒருவரைநியமனம் செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவுக்கு மார்ச் 19-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.இதுதொடர்பாக சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த வலசை இ.ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:தமிழ்நாடு அருந்ததியர் சட்டம் 2009-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இச் சட்டம் அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில், மாநில அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுப் பிரிவுகளில் அருந்ததியரை நியமனம் செய்வதற்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்குவதாகும்.தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் உறுப்பினர் பதவிகள் நீண்ட காலமாக காலியாக உள்ளது. இதனால், பொது மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.இந்திய அரசியலமைப்புச் சட்டப் பரிவு 319, ஒவ்வொரு மாநிலத்திலும் அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் அமைப்பதற்கு வழிவகை செய்கிறது.
இதன் படி, தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர்களை அந்தந்த மாநில ஆளுநர்கள் நியமிக்கலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் ஒழுங்குமுறைச் சட்டம் 1954-இன் படி, இந்த ஆணையத்தில் ஒரு தலைவர், 14 உறுப்பினர்கள் அமைக்கப்படுவர்.தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தில் 5 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. இதனால், அரசுப் பணிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்படுகிறது. கடந்த 24 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டோர் அருந்ததியர் (மோச்சி) சமூகத்திலிருந்து ஒருவர் கூட அந்த உறுப்பினர் பதவியில் நியமிக்கப்படவில்லை.
அந்த சமூகப் பிரிவில் தகுதி உள்ள நபர்களை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக நியமிக்க வேண்டும்.எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தில் காலியாக உறுப்பினர் பதவிகளை நிரப்பவும், அதில் அருந்ததியர் சமூகப் பிரிவிலிருந்து ஒருவரை நியமிப்பது குறித்து பரிசீலனை செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்என மனுவில் கோரப்பட்டது.இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் வி.இளங்கோவன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு மார்ச் 19-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக