லேபிள்கள்

2.2.15

'நாக்' அங்கீகாரம் பெற காலக்கெடு நீட்டிப்பு:யு.ஜி.சி., அறிவிப்பு

       'நாக்' அங்கீகாரம் பெற, டிசம்பர் 31ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது; விண்ணப்பிக்காவிட்டால், 2016 ஏப்ரலில் நிதி நிறுத்தப்படும்' என, பல்கலை மானியக் குழுவான - யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

        நாடு முழுவதும் உள்ள பல்கலைகள், கல்லுாரி கள், கல்வி நிறுவனங்கள், யு.ஜி.சி., மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகமான - ஏ.ஐ.சி.டி.இ., கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்கள், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவான - நாக் அங்கீகாரம் பெற்றிருந்தால் மட்டுமே, யு.ஜி.சி.,யின் நிதி உதவி கிடைக்கும்.

குறிப்பிட்ட கால இடைவெளியில், கட்டமைப்பு வசதி, மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம் உட்பட பல விஷயங்கள் அடிப்படை யில், பல்வேறு கட்டங்களாக, 'நாக்' அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. சமீபத்தில் கூட, தமிழகத்தில் உள்ள சில பல்கலைகள், 'நாக்' அங்கீகாரத்தை புதுப்பிக்காத பிரச்னை இருந்து. அதன்பின், புதுப்பிக்கப்பட்டது. டில்லியில் உள்ள ஒரு கல்லுாரி, கடந்த ஆண்டு, அங்கீகாரத்தை புதுப்பிக்கவில்லை. கால அவகாசம் கேட்டு, யு.ஜி.சி.,யை நாடியது. இதையடுத்து, ஜனவரி 22ம் தேதி நடந்த யு.ஜி.சி., கூட்டத்தில், கல்வி நிறுவனங்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்த யு.ஜி.சி., அறிவிப்பு:பல்கலைகள், கல்லுாரி கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், 2014 ஜூன் மாதத்திற்கு முன், அங்கீகாரம் மற்றும் மதிப்பீடு செய்வதற்கு, உரிய அமைப்பிடம் விண்ணப்பிக்க வேண்டும்; இல்லாவிடில், 2015 ஏப்ரலுடன், நிதி உதவி நிறுத்தப்படும் என, அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில், டிச., 22ம் தேதி நடந்த குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 'நாக்' அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க, 2015 டிச., 31 வரை, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதற்குள் விண்ணப்பிக்க தவறும் கல்வி நிறுவனங்களுக்கு, 2016 ஏப்ரல் முதல், நிதி உதவி நிறுத்தப்படும்.இவ்வாறு, அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக