லேபிள்கள்

6.2.15

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க வாய்ப்பு

தேனி மாவட்டத்தில், கடந்த 2011 முதல் 2013ஆம் ஆண்டு வரை தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை
புதுப்பிக்கத் தவறியவர்கள், வரும் மார்ச் 7ஆம்தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2013 டிசம்பர் வரை தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள்,வரும் மார்ச் 7ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்றும், பதிவு அஞ்சல் மூலம் விண்ணப்பித்தும், தங்களது பழைய பதிவு மூப்புடன்வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக