தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் வனவர், கள உதவியாளர் பணி எழுத்துத் தேர்வுக்கான நுழைவு ச்சீட்டை இணையதளத்தில்
பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேர்வாணையத்தின் தலைவர் வி. இருளாண்டி தெரிவித்தார்.
வனவர், களஉதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு இம் மாதம் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட வன அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மண்டல வன பாதுகாவலர்கள் இக்ராம் முகமது ஷா (மதுரை), அருண் (சேலம்), செண்பகமூர்த்தி (திருநெல்வேலி) மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இருளாண்டி செய்தியாளர்களிடம் கூறியது:வனத்துறையில் 148 வனவர், தமிழ்நாடு வனத் தோட்ட கழகத்தில் 17 வனவர், அரசு ரப்பர் தோட்டக் கழகத்தில் 16 கள உதவியாளர்கள் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு இம் மாதம் 22-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. சென்னை, சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய 6 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தேர்வுக்கு 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக வனத்துறை இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ச்ர்ழ்ங்ள்ற்ள்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) வெளியிடப்படும்.இதில் தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தபாலில் நுழைவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட மாட்டாது.அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.இருப்பினும் கலைப் பாடப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டாலும், நேர்முகத் தேர்வில் பங்கேற்க முடியாது என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக