நேற்று நடந்த பத்தாம் வகுப்பு கணித தேர்வு எளிமையாக இருந்தது என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
வீ.பவித்ரா (கம்மவார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி.): ஒரு மார்க்,2 மார்க் வினாக்கள் புத்தகத்தின் பின் பகுதியில் உள்ள கேள்விகளில் இருந்தே கேட்கப்பட்டதால் மிக எளிதாக இருந்தது. கட்டாய வினாக்களும் எளிமையாக இருந்தது. பல தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் இந்த தேர்விலும் வந்திருந்தது. சாதாரணமாக படிக்கும் மாணவர்கள் கூட 80 மார்க் பெறலாம். நன்கு படிக்கும் மாணவர்கள் 'சென்டம்' எளிதாக பெறலாம். அனைத்து வினாக்களும் எதிர்பார்த்தது போல் இருந்ததால் உரிய நேரத்திற்கு முன்பே தேர்வு எழுதி முடித்து விட்டேன்.
எஸ்.ஏ.அபிநயவேம்பா(தேனி மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி): ஒரு மார்க், 5 மார்க் கேள்விகள் மிக எளிமையாக இருந்தது. கட்டாய கேள்வியில் கேட்கப்பட்ட 2 வினாக்களும் எளிதாக இருந்தது. 5 மார்க்கில் 34வது வினாவில் புத்தகத்தில் உள்ள கேள்வியை நம்பரை மட்டும் மாற்றி கேட்டு இருந்தது மிக எளிமையாக இருந்தது.10 மார்க் 'சாமண்டரி' கணக்கில் முக்கோணத்தின் குத்துக்கோடு, தொடுகோடு என இரண்டு கேள்விகளும் எளிமையாக இருந்தது. கிராப்ட் கணக்கில் 'டைரக்ட் வேரியேஷன்' கேட்கப்பட்டது எளிமையாக இருந்ததால் கணக்கில் 100க்கு 100 எளிதாக பெறலாம்.
ஆர்.வெங்கடேஷ்வரன்(தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி): ஒரு மார்க், 5 மார்க் கேள்விகள் வகுப்பறையில் அடிக்கடி செய்து பார்த்த கேள்விகளே வந்தது. ஆசிரியர்கள் கூறிய முக்கிய வினாக்கள் பலவும் தேர்வில் வந்தது. புத்தகத்தில் உள்ள மாதிரி வினாக்கள் போலவே தேர்விலும் கேட்கப்பட்டிருந்தது. ஏற்கனவே மாதிரி வினாக்கள் வகுப்பில் அடிக்கடி எழுதி பார்த்ததால் தேர்வில் எளிமையாக இருந்தது. கட்டாய கேள்விகளிலும் குழப்பம் இன்றி இருந்ததால் சாதாரணமாக படிக்கும் மாணவர்கள் கூட 70 மார்க் பெற முடியும். அதிகமானோர் சென்டம் எடுக்க வாய்ப்பு ஏற்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக