பல்வேறு பல்கலையில், அஞ்சல் வழியாக பி.எட்., படிப்பு படிக்கும் இடைநிலைமற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு, சிறப்பு அனுமதியாக, அந்தந்த பள்ளியிலேயே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம் என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஊராட்சி, நகராட்சி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலையாசிரியர், சிறப்பு ஆசிரியர்கள் அஞ்சல் வழிக்கல்வி மூலமாக, பல்வேறு பல்கலையில் பி.எட்., படிப்பு படித்து வருகின்றனர். இதற்காகஅவர்கள், வெவ்வேறு பள்ளிகளை தேர்வு செய்து கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளும்போது, பணியாற்றும் பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது.இதனால், துவக்கப்பள்ளி அளவில் ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளி மாணவர்கள், கல்வி கற்பிப்பதில் பெரும் பின்னடைவை சந்திக்கின்றனர். அதேபோல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும், பி.எட்., படிப்பு அஞ்சல் வழி படிக்கும் ஆசிரியர்களால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க மாற்றுத்திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது.
இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள துவக்க, நடுநிலை, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர், சிறப்பு ஆசிரியர்கள், பல்வேறு பல்கலை யில் பி.எட்., படிப்பு படித்து வந்தால், அவர்கள் கற்பித்தல்பயிற்சியை, அவரவர் பணியாற்றும் பள்ளியில் மேற்கொள்ளலாம் என, உத்தரவிடப்பட்டுள்ளது.அரசின் இந்த சிறப்பு அனுமதி உத்தரவால், தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள துவக்க, நகராட்சி, உதவிபெறும் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை, சிறப்பு ஆசிரியர்கள், 6, 7, 8ம் வகுப்புக்கு, அந்தந்த பள்ளியில் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம்.மேலும், "ஒன்றிய, நகராட்சி, உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களில், பி.எட்., படிப்பு அஞ்சல்வழி படிப்பவர்கள், அந்தந்த பல்கலை., அனுமதிக்கும் பள்ளியில், கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம்' என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக