ஆசிரியர்களின், 15 ஆண்டு கால, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,தொடர்போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து, ஜாக்டோ ஆசிரியர் கூட்டுக்குழு நிர்வாகிகள், இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
பங்களிப்பு ஓய்வு ஊதியத் திட்டம் ரத்து,தமிழை முதல் பாடமாக்க அரசாணை வெளியீடு; இடைநிலைக் கல்வி ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியம்; ஆசிரியர்களுக்கு தனிப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவருதல் உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதற்காக, கடந்த 12 ஆண்டு களுக்கு பின், 29 சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மார்ச் 8ல், தமிழகம் முழுவதும் பேரணி நடத்தியது. தொடர்ந்து, ஏப்., 19ம்தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளது.இந்நிலையில், ஜாக்டோ ஆசிரியர் கூட்டுக் குழுவில், மேலும், 10 ஆசிரியர் சங்கங்கள் இணைய முன்வந்துள்ளன. இதற்கான இணைப்பு மற்றும் அடுத்தகட்ட போராட்டம் குறித்த, ஜாக்டோ குழு ஆலோசனைக் கூட்டம், இன்று சென்னையில் நடக்கிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக