லேபிள்கள்

30.4.15

நேரடி 2-ஆம் ஆண்டு பாலிடெக்னிக் சேர்க்கை: மே 22 -க்குள் விண்ணப்பிக்கலாம்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு
விண்ணப்பிக்க மே 22 கடைசித் தேதியாகும்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: 
நேரடி இரண்டாம் ஆண்டு பாலிடெக்னிக் சேர்க்கை அடிப்படையில், பிளஸ்-2 தேர்ச்சியுடன், ஐடிஐ தேர்ச்சிபெற்ற மாணவர்கள் தமிழகத்தில் உள்ள 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டரை ஆண்டு செயற்கை அவயங்கள், முடநீக்கியல் பட்டயப் படிப்பு முதலாமாண்டு சேர்க்கை நடைபெறஉள்ளது. 

இதற்கு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதுபோல் சென்னை தரமணியில் உள்ள டாக்டர் தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தப்படும் ஒரு ஆண்டு ஒப்பனைக் கலை பட்டயப் படிப்பில் முதலாமாண்டு சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இதற்கும் பிளஸ்-2 முடித்த மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் அவரவர் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் மே 4-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.tndte.com என்ற இணையதளத்திலிருந்து மே 4-ஆம் தேதி முதல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. சாதிச் சான்றை சமர்ப்பித்து விண்ணப்பத்தை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். பிறர் ரூ. 150 கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரியில் சமர்ப்பிக்க மே 22 கடைசித் தேதியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக