லேபிள்கள்

29.4.15

தமிழ்நாடு முழுவதும் மே 5–ந்தேதி முதல் 65 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிகளில் ஆதார் முகாம் நடத்த திட்டம்

தமிழ்நாட்டில் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கும், விடுபட்டவர்களுக்கும் சிறப்பு முகாம்கள் மூலம் போட்டோ எடுத்து விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆதார் அட்டை வழங்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னையில் 69 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் அட்டை பெற்றுள்ளனர்.
இதே போல் தமிழ்நாடு முழுவதும் 1.2 கோடி மாணவ–மாணவிகளில் 30 லட்சம் முதல் 40 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 65 லட்சம் மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட வேண்டியுள்ளது.இவர்களுக்கு பள்ளிகளிலேயே ஆதார் சிறப்பு முகாம்கள் நடத்த பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்துமாறுவருவாய்த்துறையினரை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.இதைத் தொடர்ந்து வருகிற மே 5–ந்தேதிக்குப்பின் முகாம்கள் நடத்த வருவாய்த்துறையினர் முடிவு செய்துள்ளனர். முதலில் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் முகாம்கள் தொடங்கும். தொடர்ந்து தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும், அதன் பிறகு சென்னை பள்ளிகளிலும் ஆதார் சிறப்பு முகாம் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு தனியார் ஆதார் எண்கள் வழங்குவதன் மூலம் அது கல்வித்துறை நிர்வாக தகவல் மையத்துடன் இணைக்கப்பட வாய்ப்பாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக