பிளஸ் 2 தேர்வு முடிவு வரும், 7ம் தேதிவெளியாக உள்ள நிலையில், தற்காலிகமதிப்பெண் சான்றிதழ்களை எப்படி பெறுவதுஎன்பது குறித்து,
பள்ளிகளுக்கு கல்வித் துறை புதிய உத்தரவுபிறப்பித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2தேர்வை, 8.43 லட்சம் மாணவர்கள் எழுதிஉள்ளனர். தேர்வு முடிவு, வரும், 7ம் தேதிதமிழக தேர்வுத் துறை இயக்குனர்அலுவலகத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்தஆண்டு தேர்வு முடிவு வெளியானதும்,மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண்சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிமுகமாகிறது.கல்லூரிகளில் உள்ள, 'புரவிஷனல்' சான்றிதழ்போல், இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்,உயர் கல்வியில் சேர்வதற்கான அத்தாட்சியாகஇருக்கும். இந்த சான்றிதழை எப்படிப் பெறுவதுஎன்பது குறித்த அரசாணையை, பள்ளிக்கல்வித்துறைச் செயலர் சபிதா பிறப்பித்து உள்ளார்.அதில், 'தேர்வு முடிவு கள் வெளியானதும்,தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, தேர்வுத்துறையின், http://www.dge.tn.nic.in/ என்றஇணைய தளத்தில் பள்ளிகள் மூலம், முதல்இரண்டு வாரங்களுக்கு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பின், மாணவ, மாணவியர்தங்கள் தேவைக்கேற்ப பதிவு செய்துகொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்'எனக் கூறப்பட்டு உள்ளது. இந்த தற்காலிகசான்றிதழ்களை, கல்லூரி படிப்பில் சேரபயன்படுத்திக் கொள்ள அரசாணையில்அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசாணையின்நகல்கள் அனைத்துப் பள்ளி, கல்லூரிகள்மற்றும் பல்கலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக