தமிழகத்தில் 23 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் உள்ளன. இங்கு வரும் கல்வியாண்டில் 7,8,9,11ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கு தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, வளைகோல் பந்து, கபடி, ஜிம்னாஸ்டிக், நீச்சல், டென்னிஸ், கிரிக்கெட், குத்துசண்டை விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
இதற்காக மாவட்ட அளவில் மாணவர்கள் தேர்வு செய்யும் பணி மே 2 முதல் 5 ம் தேதி வரை நடக்கிறது. மே 2ல் ராமநாதபுரம்,தர்மபுரி, நீலகிரி, நாகர்கோவில், மதுரை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், கடலூர், திருவள்ளூர், சேலம், பெரம்பலூரிலும், மே 3 ல் சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருப்பூர், தூத்துக்குடி, திண்டுக்கல், கரூர், திருவாரூர், விழுப்புரம், ஈரோடு, அரியலூரிலும், மே 4 ல் விருதுநகர், திருவண்ணாமலை, கோவை, திருநெல்வேலி, தேனி, திருச்சி, சென்னை, தஞ்சாவூர், வேலூர், நாமக்கல் மாவட்டங்களிலும் நடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக