லேபிள்கள்

26.4.15

பள்ளி செல்லா பிற மாநில குழந்தைகள் உடுமலை பகுதியில் அதிகம்

உடுமலையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடந்த, பள்ளி செல்லாக்குழந்தைகள் கணக்கெடுப்பில், பிற மாநில குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.



கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் படி, 6 முதல், 14 வயது வரை உள்ள குழந்தைகள், கட்டாயம் பள்ளி யில் சேர்க்கப்படுகின்றனர். பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகள் குறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்பட்டு, கல்வியாண்டு துவக்கத்தில் அக்குழந்தைகளும் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். நடப்பாண்டில், 1ம் தேதி முதல், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு குறித்த ஆய்வு நடக்கிறது. இதில், உடுமலையில் பிற மாநில குழந்தைகள் அதிக எண்ணிக்கையில், பள்ளி செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


அனைவருக்கும் கல்வி இயக்கத்தினர் கூறியதாவது: உடுமலை பகுதியில், கடந்தாண்டு மாணவர் சேர்க்கையின் போது, 25 பிற மாநில குழந்தைகள் கண்டறியப்பட்டிருந்தனர். நடப்பாண்டில் தற்போதே, 24 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். பீகார், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களிலிருந்து பல குடும்பத்தினர், கோழிப்பண்ணை மற்றும் நார் தொழிற்சாலை வேலைக்காக வந்துள்ளனர். இக்குழந்தைகளுக்கு, அவர்களின் தாய்மொழி அறிந்த ஆசிரியர்களைக் கொண்டு கல்வி கற்பிப்பதையே, பெற்றோர் விரும்புகின்றனர். இம்மாணவர்களின் கல்வியை மேம்படுத்த, கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக