லேபிள்கள்

15.5.15

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் 18-ந்தேதி முதல் வழங்கப்படுகிறது

2015-2016-ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில்நடைபெறும் முதலாமாண்டு பட்டயப் படிப்பு பொதுப் பிரிவு, சிறப்பு ஒதுக்கீடு மற்றும் குறிப்பிட்ட சில அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடைபெறும் பகுதிநேர பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான
விண்ணப்பப்படிவங்கள் 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 18-ந்தேதி முதல் ஜூன் 5-ந்தேதி வரை வழங்கப்படும். 
மாணவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம். 

விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ.150. நேரில் விண்ணப்பம் பெற விரும்புவோர் ரூ.150-ஐ ரொக்கமாகச் செலுத்தியும், தபால் மூலம் பெற விரும்புவோர் ரூ.150-க்கான வங்கி கேட்பு வரைவோலையினை சம்பந்தப்பட்ட ‘‘முதல்வர்’’ பெயரில் எடுத்து, சுயவிலாசமிட்ட உறையில் ரூ.15-க்கான அஞ்சல் தபால் ஒட்டி அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அந்தந்த அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள்: ஜூன் 6-ந் தேதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக