விதிகளை மீறி, பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர் பட்டியலை கணினி மூலம் சரிபார்த்து, 'ரெய்டு' நடத்த, அண்ணா பல்கலை
திட்டமிட்டுஉள்ளது.அண்ணா பல்கலையின் கீழ் இணைப்பு பெற்று, தமிழகத்தில், 580 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
ஆண்டுதோறும் இந்த கல்லூரிகளுக்கு, அகில இந்திய தொழில்நுட்பகல்வி கவுன்சிலான - ஏ.ஐ.சி.டி.இ., மூலம் அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அண்ணா பல்கலை அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தி, கல்லூரியின் உட்கட்டமைப்பு, ஆய்வகம், பேராசிரியர்கள் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், இணைப்பு அனுமதி வழங்குவர். இந்த ஆண்டு, கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கும் பணி நடக்கிறது.நாடு முழுவதும், பல தனியார் பொறியியல் கல்லூரிகளில், ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில், பல பேராசிரியர்களின் பெயர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் இடம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. ஏ.ஐ.சி.டி.இ., விதிப்படி, ஒரு பேராசிரியர் ஒரு கல்லூரியில் மட்டுமே பணியாற்ற வேண்டும்.
இல்லையென்றால், மாணவர்களுக்கு சரியான நேரத்துக்கு பாடம் நடத்தவோ, செய்முறை பயிற்சி தரவோ முடியாது. இதன்படி, எட்டு மாநிலங்களில், ஏ.ஐ.சி.டி.இ., நடத்திய ஆய்வில், பல பொறியியல் கல்லூரிகளில் விதிகளை மீறி ஒரே ஆசிரியர் பணியாற்றுவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.ஆந்திரா, உ.பி., மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில், அதிக அளவில் இந்த விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் தங்கள்இணைப்பு கல்லூரிகளின் பேராசிரியர் பட்டியலை சரிபார்க்குமாறு பல்கலைகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை கணினி மூலம் சரிபார்க்கவும், ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் நேரடி ஆய்வு நடத்தவும், அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. இதன்படி, பல கல்லூரிகளில்ஒரே பேராசிரியர் இருந்தால், அந்த கல்லூரிகளில் சம்பந்தப்பட்ட பேராசிரியரின் பாடப்பிரிவுக்கு அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக