லேபிள்கள்

11.5.15

எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ்.: இன்று முதல் விண்ணப்பம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க திங்கள்கிழமை முதல் வரும் 28-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள்
விநியோகிக்கப்படஉள்ளன.சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பம் வழங்கப்படும்.
எம்.பி.பி.எஸ். விண்ணப்பத்தைப் பெற, வேண்டுகோள் கடிதத்துடன் 'Secretary, Selection Committee, Kilpauk, Chennai' என்ற பெயரில் விண்ணப்பக் கட்டணமான ரூ. 500-க்கு வரைவுக்காசோலை ஆகியவற்றை அளிப்பது அவசியமாகும்.சுகாதாரத்துறையின் இணையதளம் www.tnhealth.org மூலமும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக