லேபிள்கள்

13.5.15

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் பட்டியல் நாளை வழங்க ஏற்பாடு

பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் நாளை வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் மாணவர்கள் உயர் கல்விக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 7ம் தேதி வெளியானது. இந்த தேர்வில் 8 லட்சத்து 39 ஆயிரம் பேர் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு வசதியாக தற்காலிக மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படும்.
அவை 14ம் தேதி முதல் பள்ளிகளில் வழங்கப்படும் என்று தேர்வு துறை அறிவித்திருந்தது. தற்போது தற்காலிக மதிப்பெண் சான்றுகள்  தயார் செய்யப்பட்டுள்ளன. இவை அந்தந்த பள்ளிகளி்ன் இணையத்தில் இருந்து பதவிறக்கம் செய்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று முதல் பள்ளிக் கணினிகளில் இருந்து தற்காலிக சான்றுகள் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. அவை நாளை மாணவ மாணவியருக்கு வழங்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செய்து வருகின்றனர். தற்காலிக சான்றிதழின் மதிப்பு 6 மாத காலம் என்பதால் அதற்குள் நிரந்தர பட்டியல் வழங்க தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக