சென்னை:பிளஸ் 2 தேர்வுகள் முடிவுகள்வெளியான நிலையில், 2015 - 16ம்ஆண்டுக்கான, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,படிப்புகளுக்கான விண்ணப்பம்,
11ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
தமிழக அரசின்,
19 மருத்துவக் கல்லுாரிகள்மற்றும் சென்னை மருத்துவக் கல்லுாரியில்,மே 28ம் தேதி வரை விண்ணப்பம் கிடைக்கும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க,மே 29ம் தேதி கடைசி நாள். ஜூன் 12ம் தேதி,தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.விண்ணப்பக் கட்டணம், 500 ரூபாய். கடந்தஆண்டு போல், 40 ஆயிரம் விண்ணப்பங்கள்அச்சடிக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில், 19 அரசு மருத்துவக்கல்லுாரிகளில், மொத்தம், 2,555எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன; அகிலஇந்திய ஒதுக்கீட்டுக்கு, 383 இடங்கள் போக,மாநிலத்திற்கு, 2,172 இடங்கள் கிடைக்கும்.சென்னை அரசு பல் மருத்துவக் கல்லுாரியில், 85 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.
ஓமந்துாரர் அரசு மருத்துக் கல்லுாரிக்கு, இந்தியமருத்துவக் கவுன்சில் - எம்.சி.ஐ., அனுமதி, 15ம் தேதிக்குள் கிடைக்கும் என,எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மொத்தம், 100எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. விண்ணப்பவினியோகம் குறித்த முறையான அறிவிப்பு, 10ம் தேதி வெளியிடப்படும் என, மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக