குரூப் 4 தொகுதியில் தட்டச்சர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி அடைந்தோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 13-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கடந்த 2013-14, 2014-15 ஆம் ஆண்டுக்கான குரூப் 4-இல் அடங்கிய 1,683 தட்டச்சர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்ய கடந்த ஆண்டு டிசம்பரில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளன.இதற்கான பணிகள் வரும் 13-ஆம் தேதி தொடங்கி வரும் 28-ஆம் தேதி வரை நடைபெறும்.
சென்னை, பிரேசர் பாலம் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது. சரிபார்ப்புக்கு 2,176 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.சான்றிதழ்சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தலுக்கான அட்டவணை (Certificate Verification Schedule) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துக் கொள்ளத் தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக