லேபிள்கள்

11.7.15

ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்விற்கு கல்வித்துறையின் சிறப்பு அரசாணை தான். முட்டுக்கட்டையா?

கடந்த ஆண்டு அரையாண்டு தேர்வையொட்டி பள்ளிக்கல்வித்துறை செயலர் சிறப்பு அரசாணை ஒன்றை பிறப்பித்தார். அதில்,அரையாண்டு தேர்வு நெருங்குவதால் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் எதுவும் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டது.
இதை ரத்து செய்தால் மட்டுமே பொது மாறுதலுக்கான கலந்தாய்வு விதிமுறை அரசாணை வெளியிட முடியும்.கல்வித்துறை செயலர் நினைத்தால் மட்டுமே இது முடியும் என்பதால், இது தொடர்பாக ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றன.

காலாண்டு தேர்வு நெருங்குவதற்குள் பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும். இல்லையெனில் மாறுதல் எதிர்பார்த்த பல ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி, மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும், என்பது பெரும்பாலான ஆசிரியர்கள் கருத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக