லேபிள்கள்

10.7.15

வங்கி கணக்குகளில் குளறுபடி மாணவர் உதவித்தொகையில் சிக்கல்

வங்கி கணக்கு முறையாக பராமரிக்கப் படாததால் பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான கல்வி உதவித்தொகைகளை
வழங்குகின்றன.மாணவர்களுக்கு தலைமையாசிரியர் மூலம் பொதுத்துறை வங்கிகளில் துவங்கப்பட்ட 'ஜீரோ பேலன்ஸ்' கணக்கில் அவை நேரடியாக செலுத்தப்படுகின்றன. 
அக்கணக்குகள் முறையாக பராமரிக்கப்படாததால் குறிப்பிட்ட காலத்திற்குப்பின் அக்கணக்குகளை வங்கிகள் ரத்து செய்கின்றன.

இதனால் உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,“இடை நிற்றலை தவிர்க்க மாணவர்களுக்கு 10ம் வகுப்பில் துவங்கி பிளஸ் 2 முடிக்கும் வரை மாணவர்களின் வங்கி கணக்கில்மத்திய அரசு 5,000 ரூபாய் செலுத்துகிறது. இதுபோல் மற்ற உதவித் தொகைகளும்வழங்கப்படுகின்றன. ஆனால் அக்கணக்குகள் செயல்பாட்டில் இல்லாதது, எண் தவறு உள்ளிட்ட காரணங்களினால் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அக்கணக்கை மாணவர்கள் முறையாக பராமரிக்க வேண்டும்.அந்த விபரத்தை ஒவ்வொரு ஆண்டும் தலைமையாசிரியர்கள் சரிபார்க்க வேண்டும்,”என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக