லேபிள்கள்

9.7.15

புதிய பாட புத்தகத்தில் முன்னுரை, முகவுரை நீக்கம்

பிளஸ் 1, பிளஸ் 2 பாட புத்தகங்களில் முன்னுரை, முகவுரை நீக்கி, புதிதாக வழங்கப்பட்டு உள்ளது. 


தனிநபர்களின் பெயர்களும் நீக்கப்பட்டு உள்ளன.பிளஸ் 1, பிளஸ் 2 பொருளாதாரம், வரலாறு பாட புத்தகங்களின் முகவுரையில், 
தி.மு.க., தலைவர் கருணாநிதி, முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுமற்றும் முன்னாள் திட்டக் குழு துணைத் தலைவர், நாகநாதன் ஆகியோரின் பெயர் இருந்தன. இப்பெயர்களை நீக்கி, 1.30 கோடி ரூபாய் செலவில், புதிய பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.இந்த புத்தகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, நேற்றுமுதல் வழங்கப்பட்டன. புதிய புத்தகத்தில், முன்னுரை, முகவுரை மற்றும் புத்தகம்தயாரான ஆண்டு ஆகிய தகவல்கள் நீக்கப்பட்டு உள்ளன. மேலும், குழுத் தலைவர், மேலாய்வாளர் மற்றும் நுாலாசிரியர் பெயர்களும் நீக்கப்பட்டு உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக