லேபிள்கள்

11.7.15

தமிழக பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கல்வித்துறை ஆலோசனை

தமிழகத்தில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் மும்மொழிக் கொள்கையை கொண்டுவருவதற்காக பள்ளிக் கல்வித்துறை களமிறங்கியுள்ளது.


 பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இதற்கான ஒருங்கிணைப்பு மையமாக செயல்படுகிறது.இந்த மையம் 13 தலைப்புகளில் மதுரையில் 20ம் தேதியும், கோவையில் 22ம் தேதியும், சென்னையில் 24ம் தேதியும் கலந்தாலோனை கூட்டங்களை நடத்த உள்ளது.

மேற்கண்ட 13 தலைப்புகளில் 11வது தலைப்பானது மொழியை வளர்த்தல் என்பதாகும். அதில் மும்மொழிக் கொள்கையை கொண்டு வருவது தொடர்பாக பல்வேறு குழுக்களுக்கு இடையிலான கலந்துரையாடலுக்கு 9 வகையான கேள்விகள் இடம் பெறுகின்றன.அதில் முக்கியமாக மும்மொழிக் கொள்கை பற்றியது. தமிழ் தவிர சமஸ்கிருத மொழியை வளர்ப்பதற்கான கேள்விகளும் இடம் பெற உள்ளன. நாடு முழுவதும் பெறப்படும் ஆலோனையின் பேரில் சமஸ்கிருத மொழி மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் பள்ளிகளில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக