பல் மருத்துவ, 'டிப்ளமோ' படிப்புகள் இரண்டுக்கு, இந்திய பல் மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில், பல் மருத்துவம் சார்ந்த, 24 படிப்புகள் உள்ளன. இதில், 'டென்டல் மெக்கானிக்கல், டென்டல் ஹைஜீனிஸ்ட்' என்ற இரு, டிப்ளமோ படிப்புகளுக்கு, அனுமதி கிடைக்காமல் இருந்தது. தற்போது, இந்திய பல் மருத்துவக் கவுன்சில் உரிய அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி கூறியதாவது:
பல் மருத்துவம் சார்ந்த மாணவர் சேர்க்கை, பதிவு முறை, பயிற்சி முறை, பாடத்திட்டம் வகுத்தல், தேர்வு முறை, சான்று வழங்கல் என, அனைத்தும் ஒரே சீராக இருக்க, மாநில பல் மருத்துவக் கவுன்சில் அமைத்து, செயல்படுத்தி வருகிறோம் என, விளக்கம் அளித்தோம்.
இதையேற்று, இரண்டு டிப்ளமோ படிப்புகளுக்கும், இந்திய பல் மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. அனைத்து நடைமுறைகளும் சீராக இருக்க, தமிழகம் போன்று, மாநில பல் மருத்துவக் கவுன்சில் உருவாக்க மற்ற மாநிலங்களுக்கும் பரிந்துரைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக