லேபிள்கள்

28.11.15

பிளஸ் 2: தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க டிச. 4 வரை கால அவகாசம்

வரும் 2016 மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு அரசுத் தேர்வுகள் சேவை மையத்தின் மூலம் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க நவம்பர் 16 முதல் 27 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.


தொடர் மழை காரணமாக தனித் தேர்வர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள்சேவை மையங்களின் மூலமாக இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தமையங்கள் குறித்த விவரங்களை www.tndge.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக